shadow

jv wrapper.inddகடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, சுந்தரேச ஐயர், ரகு உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார் புதுவை நீதிமன்ற  நீதிபதி சி.எஸ்.முருகன். இந்த வழக்கு புதுவை நீதிமன்றத்தில் நடைபெற்றதால் தீர்ப்பை எதிர்த்து புதுவை அரசால் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் மேல்முறையீட்டுக்கான எந்தவொரு நடவடிக்கைகளிலும் புதுவையில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் அரசு ஈடுபடவில்லை. இதனால் ஜெயலலிதா புதுவை அரசு மீது கடும் அதிருப்தி கொண்டார்.

ஆனால் தற்போது திடீரென 7  மாதங்கள் கடந்த நிலையில் ஜெயேந்திரர் வழக்கு அவசர அவசரமாக தூசுதட்டி, மேல்முறையீடு செய்​யத் தயாராகி வருகிறது. இதனால் காஞ்சி சங்கர மடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும், என்.ஆர்.காங்கிரஸும் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் ரங்கசாமி மீது ஜெயலலிதா கடும் கோபம் கொண்டார். இதனால் வரும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் ரங்கசாமியை வீழ்த்த இப்பொழுதே வியூகம் அமைக்க தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. என்.ஆர்.காங்கிரஸின் முக்கிய தலைவர்களை அதிமுக பக்கம் இழுக்கும் பணியை செம்மலையிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ரங்கசாமி ஜெயலலிதாவை சமாதானப்படுத்துவதற்காக ஜெயேந்திரர் வழக்கை மேல்முறையீடு செய்ய முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெயலலிதாவை சமாதானப்படுத்த காஞ்சிமடம் டெல்லி பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜக தலைமை ஜெயலலிதாவுடன் இணக்கமாக இருப்பதால் அடுத்த வாரம் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர் ஒருவர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க சென்னை வரவிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply