சீமான் – ஜி.வி.பிரகாஷ் படத்தின் டைட்டில் இதுதான்
பிரபல இயக்குனர் சீமான், கடந்த 2008ஆம் ஆண்டு ‘வாழ்த்துக்கள்’ என்ற படத்தை இயக்கிய பின்னர் சுமார் 10 ஆண்டுகாலமாக எந்த படத்தையும் இயக்காமல் முழுநேர அரசியல்வாதி ஆகியுள்ளார்,. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அவர் இயக்கும் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘கோபம்’ என்ற டைட்டிலாம்
சீமானின் கேரக்டருக்கு தகுந்தவாறு அமைந்துள்ள இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஒரு புதுமுகமும் நடிக்கவுள்ளனர். அரசியல் மற்றும் ஆக்சன் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது.
முதலில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் இந்த படம் ஆரம்பிக்கவுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை என்பதால் படத்தை மிகவிரைவில் தொடங்கி ஓரிரு மாதங்களில் முடித்துவிட திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.