shadow

கண்ணா லட்டு தின்ன ஆசையா? இரண்டாம் பாகத்தில் சந்தானம்

santhanamதொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து கொண்டிருந்த நடிகர் சந்தானம் முதன்முதலில் ஹீரோவுக்கு இணையாக நடித்த படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?. இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வாகை சூடிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க சந்தானம் முடிவு செய்துள்ளார்.

சந்தானத்தின் நீண்ட கால நண்பரும், அவருடன் தொலைக்காட்சியில் பணியாற்றியவருமான ராம்பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நடித்த சேது, விசாகாசிங், பவர்ஸ்டார் சீனுவாசன் உள்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளனர்,.

Leave a Reply