shadow

விக்ரம் வேதா’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் 147 நிமிடங்கள் ஓடுகின்றது, அதாவது 2 மணி 27 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்

முதன்முதலாக விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் மதயானை கூட்டம்’ கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத், ஜான் விஜய், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர். சி.எஸ்.சாம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வினோத் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு பணியும் புரிந்துள்ளனர். இந்த படத்தை டிரெடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய்சேதுபதியின் ‘கவண்’, மாதவனின் ‘இறுதிச்சுற்று’ போல இந்த படமும் வெற்றிப்படமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply