shadow

20064e34-c69c-4413-b9bc-d965342b3a75_S_secvpf

இசைப்பிரியர்கள் இசையைக் கேட்பதில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரி்த்துள்ளனர்.

தற்போது எம்பி 3 மூலமாக பாட்டு கேட்பது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுவும் மொபைல் போன்களிலும் அனைவரும் ஹெட்ஃபோன் செருகி பாடல்கள் கேட்கின்றனர்.

இந்த பிளேயரில் சிறிதளவு சத்தத்துடன் தொடர்ந்து கேட்டாலும் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தத்தின் அளவு டெசிபல் என குறிப்பிடப்படுகிறது. 90 டெசிபல் சத்தத்துடன் 8 மணிநேரம் ஒருவர் இசையைக் கேட்டால் கண்டிப்பாக அவருடைய கேட்கும் சக்தியை இழந்து விடுவார் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மிகுந்த சந்தடிமிக்க நெடுஞ்சாலையில் ஏற்படும் இரைச்சலை 90 டெசிபலுக்கு உதாரணமாக கூறலாம்.

இந்த சத்தத்தின் அளவு 5 டெசிபல் அதிகரித்தால் 4 மணி நேரம் கேட்டாலே அவருடைய கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்றும் 100 டெசிபல் என்றால் 2 மணி நேரத்திலே இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இசையை கேட்கும்போது எம்பி3 பிளேயர் உட்பட எந்த பிளேயராக இருந்தாலும் அதனுடைய சத்தத்தின் அளவை 50 சதவிகிதம் வைப்பதுதான் பாதுகாப்பானது என கூறுகின்றனர் மருத்துவர்கள்.

90 சதவிகித சத்தத்துடன் கேட்டால் 15 நிமிடங்களுக்கு மேல் கேட்கக் கூடாது மற்றும் தரம் வாய்ந்த ஹெட்போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply