shadow

modi and singhமோடி-மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு பற்றி குறித்து பல்வேறு பத்திரிகைகள் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இந்த சந்திப்பில் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை இன்னும் கூறாத நிலையில் தற்போது முதல்முறையாக இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், பொருளாதாரம் பற்றி விவாதிப்பதற்காகவே மன்மோகனை சிங்கை பிரதமர் அழைத்ததாக தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி ஆட்சியின் சாதனைகளை ஆளும்கட்சியும், ஆட்சியில் ஏற்பட்ட ஏமாற்றாத்தை காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டு வரும் நிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து, கண்டனக் கணைகளை தொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திடீரென முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடியை டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் வீட்டில் சந்தித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்பின் காரணம் என்ன? என்று இருவருமே விவரிக்காத நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த சர்மா இந்த சந்திப்பிற்கு விளக்கம் கூறியுள்ளார். அவர் வெளியிட்டு ஒரு அறிக்கையில் “பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி விவாதிக்கவே மன்மோகன் சிங்கை மோடி அழைத்திருந்ததாகவும், இதுகுறித்தே முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்கள் ஆலோசனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply