shadow

சிம்புவின் இது நம்ம ஆளு’ தள்ளி போக விஷால் காரணமா?
simbu
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின்போது சிம்பு, விஷால் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதை அனைவரும் அறிவர். தேர்தல் முடிந்து அனைவரும் சமாதானமாகிவிட்டபோதிலும், சிம்பு-விஷால் பகை தொடர்வதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென தற்போது காதலர் தினத்தில்தான் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படம் ரிலீஸாக முக்கிய காரணம் விஷாலின் கதகளி’ வெளிவருவதுதான் என கூறப்படுகிறது. ஏற்கனவே பொங்கல் தினத்தில் வெளியாகும் ‘அரண்மனை 2, மற்றும் கதகளி பெருவாரியான திரையரங்குகளை ரிசர்வ் செய்துவிட்டதால் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், இந்த படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

English Summary: The reason of ‘Idhu Namma Aalu’ release postpone is Vishal?

Leave a Reply