shadow

kutti thala ajithசமீபத்தில் ‘என்னை அறிந்தால்’ வெற்றிப்படத்தை கொடுத்த அஜீத்திற்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. நேற்று முழுவதும் அஜீத் ரசிகர்கள் டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குட்டித்தலைக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் குட்டித்தல’ பிறந்த நேரத்தை வைத்து அவருடைய ஜாதகத்தை கணித்துள்ளதாகவும், குட்டித்தல’ பூசம் நட்சத்திரம் கடக ராசி என்றும் அவர் பிறந்த  நட்சத்திரத்திற்கும் ராசிக்கும் அவருக்கும் அவரது தந்தை அஜித்துக்கும் குபேர யோகம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளதாக சில நிமிடங்களுக்கு முன்பு டுவிட்டரில் ஒரு கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்ததும் அஜீத் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என தொடர் வெற்றிகளை குவித்து வரும் அஜீத் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனை படங்களை கொடுக்கும் அளவுக்கு குட்டித்தல’ அதிர்ஷ்டம் இருக்கும் என்றும் அந்த ஜோசியர் கூறியுள்ளாராம்.

Leave a Reply