shadow

பெப்சி, கோக்கை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம். வந்துவிட்டது விழிப்புணர்வு

ஜல்லிக்கட்டுக்காக கடந்த ஐந்து நாட்களாக இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டது. இன்று அல்லது நாளை அவசர சட்டம் இயற்றப்பட்டு வாடிவாசல் திறப்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இந்த போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் விடிவுகாலம் ஏற்படவில்லை, பலவித விழிப்புணர்வுகளை பொதுமக்கள், இளைஞர்கள் தட்டியெழுப்பியுள்ளனர்.

குறிப்பாக நம்முடைய தண்ணிரை கிட்டத்தட்ட இலவசமாக எடுத்து கொஞ்சம் சர்க்கரையையும், கலர்பொடியையும் கொஞ்சம் பூச்சி மருந்தையும் கலந்து விற்பனையாகி வந்த பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களுக்கும் சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று அன்னிய நாட்டு நிறுவனங்களின் பெப்சி கோக் ஆகியவற்றை தரையில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் பல வணிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இனிமேல் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த விழிப்புணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டால் இந்தியர்களின் உடல்நலம் பாதுகாப்புடன் இருப்பது மட்டுமின்றி நம்முடைய கலாச்சார பானமான மோர், இளநீர் ஆகியவற்றுக்கு விடிவுகாலமும் ஏற்படும்.

Leave a Reply