Manja-Pai-Tamil-Movie-Songsகோச்சடையான் படம் சுமாராக போனதால் ரிலீஸுக்கு காத்திருந்த சிறுபட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த 23ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் கோச்சடையான் ரிலீஸ் ஆனது. எனவே ஏற்கனவே ரிலீஸுக்கு தயாராக இருந்த சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர். கோச்சடையான் ரிலீஸாகி இருப்பதால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வேறு எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாது என தியேட்டர் அதிபர்கள் கூறிவிட்டதால் சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கியிருந்தது.

இந்நிலையில் கோச்சடையான் திரைப்படம் சுமாராக ஓடுவதால் பல தியேட்டர்களில் இந்த வாரத்தோடு கோச்சடையானை தியேட்டரில் இருந்து தூக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த வாரம், விமல் நடிக்கும் ‘மஞ்சப்பை’, பிரகாஷ்ராஜ் நடித்து, தயாரித்து, இயக்கி இருக்கும் ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.  இதனை தொடர்ந்து அடுத்து வரும் இருவாரங்களில் விவேக் நடிப்பில் ‘நான் தான் பாலா’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெல்லிசை’, விஷ்ணு நடிக்கும் ‘முண்டாசுப்பட்டி’, விக்ரம் பிரபு நடிக்கும் ‘அரிமா நம்பி’, ஜெயம் ரவி நடிக்கும் ‘பூலோகம்’, சித்தார்த் நடிக்கும் ‘ஜிகர்தண்டா’, விஜய் இயக்கத்தில் ‘சைவம்’, ஜெய் நடிக்கும் ‘திருமணம் என்கிற நிக்காஹ்’ உள்ளிட்ட பல படங்கள் போட்டியில் இருக்கின்றன.

மொத்தத்தில் கோச்சடையான் தோல்வியால் சிறுபட்ஜெட் படங்கள் இந்த மாதமே ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *