shadow

stalin and kushbooதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், வருத்தம் தெரிவித்தால் மீண்டும் அவர்களை ஏற்றுக் கொள்ள திமுக தயாராக இருக்கிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவில் இருந்த விலகிய குஷ்பு, திடீரென காங்கிரஸில் சேர்ந்துள்ளார். அவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில் 2016 ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆகிய தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போமா? என்பதை இப்போதே சொல்ல முடியாது. அதற்கு தற்போது சரியான நேரம் இல்லை. சட்டசபைத் தேர்தலையொட்டி நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. தொண்டர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்தி வருகிறேன்.

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து கட்சிக்கு மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ள திமுக எப்போதும் தயாராக இருக்கிறது. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும், வெளியேறியவர்களும் திமுக என்ற மிகப் பெரிய குடும்பத்தின் அங்கத்தினர்கள்தான். அவர்களை நாங்கள் ஒருபோதும் வெறுத்ததில்லை என்று கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நீக்கியே தீரவேண்டும் என பிடிவாதமாக இருந்த ஸ்டாலினின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு குஷ்பு ஏற்படுத்திய பரபரப்புதான் காரணம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply