shadow

ajith pilotதல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜீத், கோலிவுட்டின் மாஸ் நடிகர்களில் ஒருவராக மட்டுமின்றி பல்வேறு திறமைகள் படைத்தவராகவும் விளங்கி வருகின்றார் என்பது தெரிந்ததே.

மோட்டார் பைக் ரேஸர், கார் ரேஸர், சிறந்த புகைப்பட கலைஞர், ருசியான பிரியாணி செய்பவர் போன்ற பல திறமைகள் அவருக்குள் இருந்தாலும், அனைவருடனும் அன்புடன் பழகுபவர், தலைக்கனம் இல்லாத ஒரு சிறந்த மனிதர் என்று அவருடைய படங்களை பிடிக்காதவர்கள் கூட சொல்வதுண்டு.

இந்நிலையில் இந்திய திரையுலக நடிகர்களில் பைலட் லைசென்ஸ் பெற்ற ஒரே நடிகர் அஜீத் மட்டுமே என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் பைலட் லைசென்ஸ் அப்ளை செய்ததாகவும், ஆனால் அவருக்கு லைசென்ஸ் கிடைத்ததா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

மோட்டார் பைக், கார் மற்றும் விமான லைசென்ஸ் வைத்துள்ள அஜீத், தனது திறமைகளை அவ்வப்போது தான் நடிக்கும் படங்களிலும் வெளிப்படுத்தி ஆச்சர்யப்படுத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply