ஒரு இரவுக்கு $15,000 வாடகை. ஒபாமாவின் இத்தாலி பயணத்திற்கு தயாராகிய ஆடம்பர பங்களா

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் இத்தாலி நாட்டிற்கு சுற்றுலா செல்லவுள்ளனர். ஒபாமா குடும்பத்தினர் தங்குவதற்காக இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் நவீன பங்களா ஒன்று தயாராகியுள்ளது.

22 பெட்ரூம்கள், நீச்சல் குளம், ஜிம் மற்றும் பேஸ்கட்பால் மைதானம் உள்பட பல ஆடம்பர வசதியுள்ள இந்த பங்களாவுக்கு ஒருநாள் வாடகை $15,000 என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.50 லட்சம் ஆகும். இந்த பங்களாவில் ஆடம்பர கார்கள், ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர் ஆகியவை ஒபாமா குடும்பத்தினர் தங்கும் வரை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு செல்லும் ஒபாமா குடும்பத்தினர்களுடன் 22 செக்யூரிட்டி அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *