dhoni and sakshiஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அந்த குழந்தைக்கு தோனி ஷீபா என்ற பெயரை வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தற்போது உலகக் கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும் தோனி, தனக்கு பிறந்த குழந்தையை இன்னும் நேரில் பார்க்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்தே அவர் தன்னுடைய குழந்தைக்கு ஷீபா என்று பெயர் சூட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தோனிக்கு குழந்தை பிறந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தோனி மற்றும் சக வீரர்களுக்கு சமீபத்தில் சிறப்பு விருந்து ஒன்று அளிக்கப்பட்டது. இந்த விருந்தின் போது சக வீரர்களிடேயே தனது குழந்தையின் பெயரை தோனி பகிர்ந்து கொண்டார். தனது மனைவி ஷாக்ஷிக்கு இந்த பெயர் மிகவும் பிடித்திருந்தால் அதையே அவர் சூட்டியதாகவும் தோனி கூறியுள்ளார். பெர்ஷிய மொழியில் ஷீபா என்பதற்கு அழகு என்று அர்த்தமாம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *