பிரதமர் மோடியின் கின்னஸ் சாதனை இதுதான்

modiஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியா வந்தபோது அவரை வரவேற்ற பாரத பிரதமர் மோடி கண்கவரும் கோட் ஒன்றை அணிந்திருந்தர். இந்த கோட்டின் விலை ரூ.10 என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உடையில் மெல்லிய சிறு எழுத்துகளில் மோடியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

எளிமையை பின்பற்றுவதாக கூறும் பிரதமருக்கு இவ்வளவு விலையுயர்ந்த ஆடம்பர உடை எதற்கு என சர்ச்சைகள் கிளம்பினாலும் இந்த கோட்டை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்கான நிதி தொகுப்புக்காக பயன்படுத்த பிரதமர் உத்தரவிட்டார்.

இதன்படி இந்த கோட் கடந்த 20-2-2015 அன்று ஏலம் விடப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த லஜ்ஜிபாய் துளசிராம் பட்டேல் என்பவர் இந்த கோட்-சூட்டை 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 311 ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி இருந்தார்.

உலக அளவில் இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த உடையும் இதற்குமுன் ஏலம் போனது கிடையாது என்பதால் பிரதமர் மோடி அணிந்திருந்த இந்த கோட்-சூட்டை உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன உடையாக உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ் புத்தகம்’ அங்கீகரித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *