ரஜினி ஆட்சியில் அமைச்சர்கள் யார் யார்? போயஸ் கார்டனில் இருந்து கசிந்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார் என்ற நிலையில் அவருடைய ஆட்சி அமைந்தால் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன

ரஜினிகாந்த் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையே தவிர, ஒரு பத்து வருடம், அல்லது இருபது வருடம் செயல்பட்டு கொண்டிருக்கும் கட்சியில் என்னென்ன கட்டமைப்புகள் இருக்கிறதோ அந்த கட்டமைப்புக்கள் அனைத்தும் ரஜினி கட்சியில் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

60 ஆயிரம் பூத்துகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என அனைத்தும் தயார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டியது ஒன்று தான் பாக்கி என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி கட்சியின் ஆட்சி அமைந்தவுடன் யார் யார் அமைச்சர்கள் என்பது கூட பட்டியல் தயாராகி விட்டதாம்

தற்போது அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் நால்வர், திமுக பிரமுகர் மூவர், மதுரையை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், மேலும் தனிக்கட்சி நடத்தி வரும் தலைவர் ஒருவர் என மொத்தம் 10 பேர்கள் அமைச்சர் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply