ராணுவ அதிகாரி மனைவி கொலையில் இன்னொரு ராணுவ அதிகாரி தொடர்பா?

டெல்லியின் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி என்பவரின் மனைவி சைலஜா திவிவேதி என்பவர் சமீபத்தில் பட்டப்பகலில் டெல்லியின் முக்கிய சாலையில் கொலை செய்யபப்ட்டார். இந்த கொலை சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில் ராணுவ அதிகாரி அமித் திவிவேதியின் நண்பரான மற்றொரு ராணுவ அதிகாரிக்கு சைலஜா கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை தேடியபோது அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் பதுங்கி இருந்த அந்த ராணுவ அதிகாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். சைலஜா கொலை குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *