shadow

சூர்யாவின் அடுத்த படத்தில் டைட்டில் இதுதான்

சூர்யாவின் அடுத்த படத்தில் டைட்டில் இதுதான்’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்திற்கு என்.ஜி.கே (NGK). என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஜி.கே என்றால் நந்த கோபாலன் குமாரன் என்று அர்த்தமாம். தமிழில் டைட்டில் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற நிலை தற்போது இல்லாததால் இதே டைட்டில்தான் படம் வெளியாகும் வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு பட தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Leave a Reply