குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவ்குபாய் உந்தாத் என்பவர் திடீரென காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் நரஹரி அமின், மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. விட்டல் ரடாடியா ஆகியோர் பாரதிய ஜனதாவில் இணைந்த நிலையில் நேற்று குஜராத் காங்கிரஸின் மூத்த தலைவர் பவ்குபாய் உந்தாத் அவர்களும் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.

பாரதிய ஜனதாவில் இணைந்த பின்னர் பேட்டியளித்த பவ்குபாய், ‘இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல நரேந்திர மோடியால் மட்டும் முடியும். நாட்டின் வளர்ச்சியை விரும்பும் ஒவ்வொருவரும் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். உலக அளவில் இந்தியா பெருமை பெற வேண்டியே பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளேன், என்று கூறியுள்ளார்.குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவரே பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply