shadow

உலகின் மிகப்பெரிய ‘உல்லன் ப்ளாங்கெட்’. சென்னை அமைப்பு கின்னஸ் சாதனை
 guinness
உலகிலேயே மிகப்பெரிய உல்லன் ப்ளாங்கெட் ஒன்றை ‘மதர் இந்தியா க்ரோச்செட் க்வின்ஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த கின்னஸ் சாதனை சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்தும் ‘மதர் இந்தியா க்ரோச்செட் க்வின்ஸ்’ அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் அனுப்பிய உல்லன் ப்ளாங்கெட்டுக்களை ஒன்றிணைத்து உலகின் மிகப்பெரிய அதாவது சுமார் 11,148 மீட்டர் அளவுள்ள இந்த மகா ‘உல்லன் ப்ளாங்கெட்’டை உருவாக்கி  சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் 3,378 மீட்டர் தான் அளவான உல்லன் ப்ளாங்கெட்தான் கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதைவிட மூன்று மடங்கு பெரிய உல்லன் ப்ளாங்கெட்டை உருவாக்கி ‘மதர் இந்தியா க்ரோச்செட் க்வின்ஸ் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. இந்த கின்னஸ் சாதனைக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Chennai Today News: The largest crochet blanket was made in Chennai

 

Leave a Reply