shadow

சென்னை மாவட்ட ஆட்சி தலைவரின் அவசர செய்தி.

chennai collectorசென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் வெள்ளமே இன்னும் பல இடங்களில் வடியாத நிலையில் நேற்றூ காலை முதல் மீண்டும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய நீர்நிலைகளான பூண்டி, செம்பரம்பாக்கம், ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் ஏரிகளின் பாதுகாப்பை கருதி மேற்கண்ட ஏரியில் இருந்து அதிகளவு நீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று காலை செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சற்று முன்னர் சென்னை கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அவசர செய்தியில், “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் தற்போது வினாடிக்கு 5000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு வரும் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் உபரி நீர் திறந்துவிடும் அளவு 7500 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை கலெக்டரின் அவசர செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

shadow

Leave a Reply