shadow

சூர்யாவின் ’24’ படம் குறித்த முக்கிய தகவல்கள்
surya-24-movie-fan-poster
முதல்முறையாக சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள ’24’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு இம்மாத இறுதியில் ஐதராபாத் நகரில் நடைபெறவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா பிரபல தொலைக்காட்சி தமிழ் மற்றும் தெலுங்கு சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமின்றி யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படம் படத்தின் தலைப்புக்கேற்றவாறு ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஏப்ரல் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் விக்ரம்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்காக நான்கு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Chennai Today News: The important details about surya’s 24

Leave a Reply