பெண்கள் அணியும் பிராவில் இத்தனை அம்சங்களா?

பெண்கள் பிரா அணிவது வெறும் தோற்றத்திற்காக மட்டுமன்றி மார்பகத்தின் பாதுகாப்பிற்காகவும் என்பதை உணரவேண்டும். பருவமடைந்த வயதில் இருந்தே பெண்கள் பிராவை அணிய தொடங்கி விடுகின்றனர். ஆனால் பல பெண்கள் சரியான அளவுள்ள, மார்பகங்களுக்கு சரியாக பொருந்தும் பிராக்களை அணிவதில்லை

பெரும்பாலான பெரும்பாலான பெண்கள் இடுப்புக்கு மேல் உள்ள அளவிலேயே பிராவை கேட்டு வாங்கி வருவதாக தெரிகிறது. ஆனால் அந்த அளவு மட்டுமின்றி கப்களும் சரியாக இருக்கும் பிராவை வாங்க வேண்டும். சரியான அளவில்லாத பிராக்களை அணிந்தால் தோற்றம் சிறப்பாக இருக்காது மட்டுமின்றி மார்பகத்திற்கு தொந்தரவு ஏற்படும்

பிராவின் வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சரியான சைஸ் பிராக்களை கேட்டு வாங்குவதில் பெண்கள் எந்தவித கூச்சமும் காட்டக்கூடாது. இல்லையெனில் பெண்களை விற்பனையாளராக இருக்கும் கடைகளில் சென்று வாங்கலாம்
மார்பகத்தை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் பிரா மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் பிராவை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் வாங்கவேண்டும்

பெரிய மார்பகங்கள் உள்ளவர்கள் மார்பகத்தை தாங்கி பிடிக்கும் வகையில் அண்டர் வயர்டு பிராவை அணியலாம் அதேபோல் சிறிய மார்பகங்கள் உள்ளவர்கள் பேடட் பிரா வாங்கி அணியலாம்

மேலும் ஒரே மாதிரியான பிராக்களை உபயோகிக்காமல் உடுத்தும் உடை, செல்லும் இடம் ஆகியவற்றை பொருத்து பிராக்களை அணிய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply