shadow

grains

முளைக்கட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்தும் ப்ரோடீன் நிறைந்த ஒரு இயற்கையான உணவாகும். பருப்புகள், கடலைகள், விதைகள், தானியங்கள் மற்றும் அவரை வகைகளை முளைக்கட்டலாம். முளைக்கட்டல் மூலம் அவற்றின் கனிமப்பொருள் உள்ளிழுக்கப்பட்டு ப்ரோடீன் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கின்றது. முளைக்கட்டல் முறையில் அவற்றில் இருக்கும் ஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும் ப்ஹைடெட் போன்ற ஆண்டிநியூடிரியன்ட் பொருட்களை குறைக்கச் செய்கின்றது.  அவற்றில் உள்ள கடினமான ஸ்டார்ச் பொருட்களை குறைத்து ஜீரணதிற்கு உதவி புரியும் நொதிகளை உருவாக்கச் செய்கின்றது. முளைக்கட்டல் என்பது தானியங்களையும் பருப்புகளையும் தண்ணீரில் வெகு நேரம் ஊறவைப்பதுதான் ஆகும்.

கடலை வகையான பாதாம் போன்றவற்றை முளைகட்டுதல் மூலம் அவற்றில் ஒளிந்திருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் வெளியில் கொண்டுவரப்படுகின்றது. பாதாம் பருப்பை முளைக்கட்டும் போது லிபெஸ் என்னும் ஜீர்ணதிற்கு உதவி புரியும் நொதியை உருவாக்கி நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கச் செய்யும். குதிரைகொள்ளு, முள்ளங்கி விதை, ப்ரோகலி, க்ளோவர், மற்றும் சோயா போன்றவைகளை முளைக்கட்டுவது மூலம் அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் கூட்டுப்பொருள் உருவாகும். இவற்றில் உள்ள அதிகமான ஆண்டிஆக்சிடன்த்ஸ் வயது முதிர்ச்சியை குறைக்கச் செய்யும்.

முளைக்கட்டிய தானியங்கள் எளிதாக கிடைக்கக் கூடிய விலைகுறைவான பொருளாகும். பச்சை பயறு,கடலை பருப்பு, கொண்டைக்கடலை, அவரை விதை, காய்ந்த பட்டாணி போன்றவை நமது நாடு முழுவதிலும் எளிதாக கிடைக்கக் கூடிய தானியங்கள் ஆகும். பல நுற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் முளைக்கட்டிய பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திலும் முளைக்கட்டிய குதிரைகொள்ளு அதிகமான பலன்களை கொண்டுள்ளது. இதில் மாங்கனீஸ், வைட்டமின் எ,பி, சி, டி, ஈ, கே  மற்றும் அமினோ அமிலங்களை நிறைந்துள்ளது.

முளைக்கட்டிய தானியங்களின் சுகாதார பலன்களை இப்பொழுது படிக்கலாம்.

1.நொதிகள்:

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களைக் காட்டிலும் முளைக்கட்டிய தானியங்களில் ஏராளமான நொதிகள் உள்ளடங்கியுள்ளது என்று நிரூபணமாகியுள்ளது. அதிக ப்ரோடீன் நிறைந்துள்ள நொதிகள் எனப்படுவது  நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து வைட்டமின், மினரல், அமினோ அமிலம், தேவையான கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றை எடுக்கும் ஊக்கிகளாகும்.

2.அதிக ப்ரோடீன்:

விதைகள், கடலைகள், மற்றும் தானியங்கள் போன்றவற்றை முளைக்கட்டுவதன் மூலம் அதில் இருக்கும் ப்ரோடீங்களின் தரம்  அதிகரித்து ஊட்டச்சத்தை அளிக்கின்றது. முளைகட்டிய தானியங்களில் உள்ள சிலவகையான அமினோ அமிலங்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச்செய்யும்.

  1. அதிக நார்ச்சத்து:

முளைக்கட்டுவதன் மூலம் உடல் எடை குறைப்பு மற்றும் ஜீரணத்திற்கு உதவும் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கின்றது. நார்ச்சத்தானது நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச்சத்தையும் நச்சுபொருட்களையும் நீக்குவதற்கு உதவுகின்றது.

  1. விட்டமின்கள்:

முளைக்கட்டும் முறையால் அவற்றில் உள்ள பலவகையான விட்டமின்கள் அதிகரிக்கின்றது. குறிப்பாக, வைட்டமின் எ, பி, சி மற்றும் ஈ வகைகள் அதிகரிக்கின்றன. முளைக்கட்டும் முறையால் சிலவற்றில் இருக்கும் விட்டமின்கள்களின் அளவு 20 மடங்கு அதிகரிக்கின்றது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

5.அமினோ அமிலங்கள்:

ஒழுங்கற்ற டயட் முறையால் ஏற்படும் அமினோ அமிலக் குறைபாடுகள் இப்பொழுது அதிகரித்துவருகின்றன. முளைகட்டல் முறையால் மேடபாலிசத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள்  அதிகரிக்கின்றது.

6.இன்றியமையாத கனிமபொருட்கள்:

முளைக்கட்டிய தானியங்களில் உள்ள இன்றியமையாத கனிமப்பொருட்கள் நமது உடலுக்கு அதிகமாகத் தேவைப்படுக்கின்றன. முளைக்கட்டிய தானியங்களில் அல்களின் கனிமப் பொருட்களான கால்சியம், மக்னீஷியம் போன்றவைகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட ப்ரோடீன்கள் நிறைந்துள்ளது.  இவை ஜீர்ணசக்திக்கு பெரிதும் உதவுகின்றது.

7.பூச்சிக்கொல்லிகள் மற்றும் இதர சேர்க்கைகள்:

தானியம், விதை, பருப்பு போன்றவற்றை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் முளைக்கட்டலாம். இதன் மூலமாக பல நிறுவனங்கள் அதிக பூச்சிகொல்லிகளும் இதர சேர்க்கைகளும் கொண்டு  தயாரிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்.

8.அதிக சக்தி வாய்ந்தவை:

முளைக்கட்டல் மூலமாக அவற்றில் ஒளிந்திருக்கும் ஏராளமான சக்திகள் வெளிவந்து நமது உடலில் வந்தடையும். பாதாம் பருப்பை முளைக்கட்டும் போது லிபெஸ் என்னும் ஜீர்ணதிற்கு உதவி புரியும் நொதியை உருவாக்கி நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கச் செய்யும்.

9.விலை மலிவானது:

 அதிக ப்ரோடீன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மாமிசம் மற்றும் பழங்கள் போன்றவற்றை போல் அல்லாமல் இந்த முளைக்கட்டிய தானியங்கள் விலை மலிவானது. வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். வீட்டிலேயே தயாரிப்பதால் விலை குறைவானவை.

10.தனித்தன்மை:

முளைக்கட்டிய தானியங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இவற்றை பச்சையாகவோ, வேகவைத்தோ அல்லது சமைத்தோ  உட்கொள்ளலாம். ஒவ்வொருவரது விருப்பத்திற்கு ஏற்பவும், வாழ்க்கைமுறைக்கு தகுந்தாற்போலவும் இதனை சுவைத்து மகிழலாம்.

Leave a Reply