shadow

எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலாக ஏறிய ஜப்பான் பெண்மணி மரணம்

everestஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறி முதன்முதலாக சாதனை செய்த ஜப்பானைச் சேர்ந்த வீரப்பெண் ஜூன்கோ தாபெய் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

கடந்த 1953-ஆம் ஆண்டு மே 29 -ஆம் தேதி உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்கே ஆகியோர் அடைந்து சாதனை புரிந்தனர். என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்கள் இருவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிலாரி மற்றும் டென்சிங் சாதனைக்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து அதாவது 1975-ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த ஜூன்கோ தாபெய் என்ற பெண்மணி எவரெஸ்ட் சிகரத்தை னது 35-வது வயதில் அடைந்தார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றார்.

இந்நிலையில் ஜப்பானில் தனத் குடும்பத்தினர்களுடன் வாழ்ந்து வந்த தாபெய் நேற்று புற்று நோய் காரணமாக காலமானார். ஜூன்கோ தாபெய் மறைவிற்கு ஜப்பானை சேர்ந்த மலையேறும் குழுவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply