shadow

telunganaபிரதமர் பதவியேற்று மூன்றே நாட்களில் நரேந்திரமோடியின் அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதால் ஆரம்ப நிலையிலேயே ஒருசில எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

நேற்று காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370 பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், காஷ்மீர் மாநில முதல்வரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளப்பியது. இதையடுத்து இன்று மோடி அரசுக்கு எதிராக தெலுங்கானாவில் இன்று முழு அடைப்பு நடத்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் சேர்ந்த ஒருசில பகுதிகளை சீமாந்திராவுடன் இணைக்க மத்திய அரசு அவசர சட்டம் மூலம் முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு நடத்துவதாகவும் சந்திரசேகரராவ் கூறியுள்ளார்.

இன்றைய முழு அடைப்பு காரணமாக ஐதராபாத், கரீம்நகர், கம்மம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கடைகளும் முழு அளவில் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply