shadow

rosaiahஇந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த முதற் கூட்டத்தொடரில்  தமிழக ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். அரசின் எதிர்கால திட்டங்களையும்,  கடந்த கால நிலைப்பாடுகளையும் ஆளுநர் தன் உரையில் தெரிவித்து பேசினார்.

கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:

மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்கும் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

* திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.330 கோடி செலவில் நீர் சேமிப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

* குடிநீர்த் தேவையை சமாளிக்க பூண்டி ஏரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

* மீஞ்சூர், நெமிலிச்சேரியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

* இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப இது உகந்த தருணம் இல்லை.

* தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெற தீவிர முயற்சி.

* மாநிலம் முழுவதும் 200 பொதுச்சேவை மையம் அரசு கேபிள் டிவி மூலம் அமைக்கப்படும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

* மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைக்கு தேசிய நதிநீர் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வு.

* தமிழ் வளர்ச்சிக்காக ரூ.42.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அரசு கேபிள் டிவி சேவை மூலம் ஏழை மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை.

* சரக்கு, சேவை வரிவிதிப்புக்கு ஒத்தகருத்து ஏற்படுத்த தமிழகம் வலியுறுத்துகிறது.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக  செயல்படுகின்றன.

* விலைவாசியை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

* 4,680 கோடி ரூபாயில் 2.4 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வருகிறது.

* தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

* இலங்கை அகதிகள் அமைதியான வாழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ரூ.43.98 கோடியில் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை தமிழ்ச்சங்க கட்டடம் கட்டப்படும்.

* மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக்கு பாராட்டு.

முன்னதாக ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் வளர்மதி இன்று சட்டசபையில் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்க்கொண்டார்.

Leave a Reply