பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்

பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞானி அவர்கள் காலமானார். அவருக்கு வயது 64

இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவராக இருந்த ஞானியின் முழுப்பெயர் ஞானிசங்கரன். செங்கல்பட்டில் பிறந்த இவர் எழுத்தாளராக மட்டுமின்றி நாட‍க‍க் கலைஞர், அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர் என பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர்.

ஊடகங்களில் தனது அரசியல் கருத்துக்களை தைரியமாக முன்வைப்பவர். இந்த நிலையில் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று அவர் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *