shadow

நடிகை சமந்தாவை டைவர்ஸ் செய்த பிரபல இயக்குனர். அதிர்ச்சி தகவல்

samanthaaவிக்ரம், சமந்தா நடித்த “10 எண்றதுக்குள்ள’ படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், சமந்தா, இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘கத்தி’ படத்தில் ஒரு நல்ல திறமையான நடிகையாகிய சமந்தாவை வெறும் பாடலுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டோமே என்ற கவலையில் இருந்தேன். அதற்கு பிராயசித்தமாக நான் தயாரிக்கும் ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு நல்ல கேரக்டரை வழங்கினேன்’ என்று கூறினார்.

அப்போது ஏன் ஒரு திறமையான நடிகையை நீங்கள் இயக்கும் ‘அகிரா’ படத்தில் பயன்படுத்தாமல், சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இயக்குகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு காமெடியாக பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், ‘நான் சமந்தாவை டைவர்ஸ் செய்துவிட்டேன். அதனால்தான் சோனாக்ஷி சின்ஹாவை ஒப்பந்தம் செய்தேன்’ என்று கூறியதும் அந்த அரங்கமே அதிர்ந்தது.

Leave a Reply