shadow

‘பாகுபலி 2’ படத்தில் இணைந்த பாலிவுட் பிரபல நடிகை
maduri
எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரமாண்டமான திரைப்படமான ‘பாகுபலி’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் ‘பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் நடைபெறவுள்ளது. ஆனாலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ராஜமவுலி பிசியாக உள்ளார்.

‘பாகுபலி’ முதல் பாகத்தில் நடித்தவர்களே ‘பாகுபலி 2′ படத்திலும் நடிப்பார்கள் என இயக்குனர் ஏற்கனவே உறுதியாக இருந்த நிலையில், பாகுபலி’ முதல் பாகம் பாலிவுட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்ததால், இரண்டாம் பாகத்தில் பாலிவுட் பிரபல நடிகையை படத்தில் இணைக்க ராஜமவுலி முடிவு செய்துள்ளார்.

முதல் பாகத்தில் நடிக்க மறுத்ததால், ஸ்ரீதேவியை மீண்டும் அணுக விரும்பாத ராஜமவுலி, மாதுரி தீட்சித்தை அணுகியதாகவும், அவரும் உடனே ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணனின் கேரக்டருக்கு சமமான பவர்புல் கேரக்டர் மாதுரிக்கு என்றும் மாதுரியின் எண்ட்ரியால் இரண்டாம் பாகம் பாலிவுட்டில் முதல் பாகத்தை விட அதிகளவு வசூலை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply