shadow

Vijay-Samantha-Kaththi_2507cதுப்பாக்கி வெற்றி படத்தை அடுத்து விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்துவிட்டதாகவும், படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட உள்ளதாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் காமெடி கேரக்டரில் நடித்துள்ள வளர்ந்து வரும் காமெடி நடிகரான சதீஷ், விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கத்தி படத்தில் விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். விஜய் எப்பொழுதுமே தன்னை ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்புடன் யாருடனும் பழகுவதில்லை. அவர் படப்பிடிப்பில் சிலசமயம் அமைதியாக இருப்பதை பார்த்து அவரை திமிர்பிடித்தவர் என ஒருசிலர் தவறாக நினைப்பார்கள். ஆனால் உண்மையில் அவர் படப்பிடிப்பில் உடன் நடிக்கும் நடிகர்களுடன் கலகலப்பாக பழகுவார். உடன் நடிக்கும் நடிகர்களுக்கு நடிப்புக்கு தேவையான டிப்ஸ்கள் கொடுப்பார். அவருடன் இணைநத நடித்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள் என்று கூறினார்.

Leave a Reply