6 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள அதிமுகவின் அடுத்த தற்போதைய இலக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு கேபினட் அந்தஸ்து உள்ள அதிகாரம் இருப்பதால் எதிர்க்கட்சி தலைவராக இருந்து நாடு முழுவதும் கட்சியை பிரபலப்படுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. ஒரு மாநிலத்தில் முதல்வராக இருந்து நாட்டின் பிரதமர் பதவியை ஒருவரால் பிடிக்க முடிந்தது ஒரு சாதனை என்றால் அதுபோலவே ஒரு மாநிலலத்தில் ஆட்சி செய்து மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிப்பதும் ஒரு மிகப்பெரிய சாதனை என்றே அரசியல் வல்லுனர்களால் வர்ணிக்கப்படும்.

கட்சியை தொடங்கும்போதே எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த கட்சி அகில இந்திய புகழ்பெற வேண்டும் என்பதற்காக கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்துள்ளார். அவருடைய தீர்க்கதரிசனத்தை மெய்ப்பித்து காட்டுவது ஒன்றே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கமாக தற்போது இருந்து வருகிறது.

எம்.ஜி.ஆரின் கனவு கிட்டத்தட்ட நிறைவேறும் நிலையில் உள்ளது. தற்போது மக்களவையின் எதிர்க்கட்சியாக அதிமுக உட்கார்ந்துவிட்டால், அதிமுக அகில இந்திய அளவில் பேசப்படும். எதிர்க்கட்சியின் முழு ஒத்துழைப்பு இன்றி ஒரு அரசு நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாது. மேலும் மாநிலங்களையில் ஒரு சட்டம் நிறைவேற கண்டிப்பாக எதிர்க்கட்சியான அதிமுகவின் தயவு வேண்டும். இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி தமிழகம் மட்டுமின்றி இந்திய நாடு முழுவதும் தன்னுடைய கட்சியின் புகழை பரப்ப அதிமுகவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒருசில மாதங்களில் தன்னுடைய பெயரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற சாதாரண மனிதருக்கே முடிகிறது என்றால் 25 வருட பாரம்பரிய மிக்க ஒரு அரசியல் கட்சியால் முடியாதா? வரும் ஐந்தாண்டு காலத்திற்கு சீரிய முறையில் திட்டமிட்டு காய் நகர்த்தி எதிர்க்கட்சி தலைவர் பதவியை முறையாக பயன்படுத்தினால் 2019ல் இந்தியாவின் பிரதமராக வருவதற்கு ஜெயலலிதாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். எம்.ஜி.ஆரின் கனவு முழுவதும் நிறைவேறும் நாள் அதிக தொலைவில் இல்லை. அந்த நாளை ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

65a

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *