shadow

சென்னையில் ‘கொடி’, ‘காஷ்மோரா’ வசூல் எப்படி?

kodi-kashmoraஇந்த தீபாவளிக்கு தனுஷ் நடித்த கொடி மற்றும் கார்த்தி நடித்த காஷ்மோரா ஆகிய முக்கிய படங்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் கொடி’ படத்தின் ரிசல்ட் பாசிட்டிவ் ஆகவும், ‘காஷ்மோரா’விற்கு சுமாரான ரிசல்ட்டும் வந்துள்ள நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் எப்படி என்பது குறித்து பார்க்கலாம்

தனுஷ் கொடி 23 திரையரங்க வளாகங்களில் வெளியாகி 350 காட்சிகள் திரையிடப்பட்டு கடந்த வார இறுதி நாட்களில் ரூ.1,44,15,880 வசூல் செய்துள்ளது. இதேபோல் கார்த்தியின் ‘காஷ்மோரா’ 17 திரையரங்க வளாகங்களில் 302 காட்சிகள் திரையிடப்பட்டு கடந்த வார இறுதியில் 1,18,56,420 வசூல் செய்துள்ளது.

தீபாவளி விடுமுறை நாட்களில் நல்ல வசூலை இந்த இரண்டு படங்கள் கொடுத்திருந்த போதிலும் இன்று பெரும்பாலான திரையரங்குகளில் 50% பார்வையாளர்களே இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே இந்த இரண்டு படங்களும் வெற்றி படமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply