சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடி செலவில் 45.1 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரு பாதைகளிலும் சேர்த்து மொத்தம் 42 மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரயில்பெட்டிகள் வாங்க பிரேசில் நாட்டு அல்ஸ்டாம் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக நேற்று பிரேசில் நாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் கப்பலில் வந்து சேர்ந்தன. பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து ராட்சத லாரிகள் அந்த பெட்டிகள் ஏற்றப்பட்டு சுங்க சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டிகள் அனைத்து சோதனை செய்து அதன்பின்னர் பொதுமக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் சில பெட்டிகள் பிரேசில் நாட்டி இருந்தும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்தும் பெட்டிகள் வரவுள்ளதாகவும் அனைத்து பெட்டிகளும் வந்தபிறகு உரிய முறையில் சோதனை செய்து பின்னர் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply