மிருதன் சென்சார் சர்டிபிகேட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
miruthan
ஜெயம்ரவி, லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான ‘மிருதன்’ திரைப்படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இந்த படத்திற்கு ‘யூஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்ததை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு ‘மிருதன்’ படக்குழுவினர் இந்த படத்தை அனுப்பினர். இந்த படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி அதிகாரிகள் ஒருசில மாற்றங்கள் செய்து தற்போது ‘யூஏ’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் சிறுவர்கள் இந்த படத்திற்கு பெற்றோர்களுடன் அனுமதிக்கப்படுவர் என்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிப்ரவரி 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ‘மிருதன்’ திரைப்படத்தை ‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, லட்சுமிமேனன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
Chennai today news: The big change in Miruthan censor certificate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *