shadow

motherகருவுற்ற தாய்மார்களுக்கு சிறந்த மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு உள்ள நாடுகள் குறித்து ஒரு ஆய்வு சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் நார்வே நாடு முதலிடம் பெற்றுள்ளது. நார்வேயை அடுத்து பின்லாந்து இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 140வது இடத்திற்கு பரிதாபமாக தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தாய்மார்களுக்கு தேவையான வசதிகள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், பிரசவத்தின் போது ஏற்படும் தாய்-சேய் மரணம், தாய்மார்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, பொருளாதார நிலை போன்றவைகள் முக்கியமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் நார்வே நாடு முதலிடத்தையும், பின்லாந்து இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும் ஸ்பெயின் ஏழாவது இடத்திலும், ஜெர்மனி எட்டாவது இடத்திலு உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் 23-வது இடத்திலும், இங்கிலாந்து 24-வது இடத்திலும் உள்ள நிலையில் மெரிக்கா  33-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் ஜிம்பாப்வே, வங்காள தேசம் மற்றும் ஈராக் நாடுகளுக்கு கீழே 140-வது இடத்தில் இந்தியா பரிதாபமாக உள்ளது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடைசி இடத்திலும் அதற்கு மேல் காங்கோ மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய நாடுகளும் உள்ளன.

Leave a Reply