shadow

9055

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாலமாக செயல் பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்பு தமான அமைப்பே தொப்புள் கொடி. இந்த தொப்புள் கொடியில் மூன்று இரத்த குழாய்கள் இருக்கும். அதில் 2 தமனிகளும், 1 சிரைகளும் ஆகும். ஒருவேளை குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது இதய நோய் இருந்தாலோ, ஒரே ஒரு இரத்தக்குழாய் மட்டும் தெரியும். இத்தகைய தொப்புள் கொடியானது குழந்தை பிறந்த பின்னர் வெட்டப்படும். அப்படி வெட்டிய பின்னர் பலருக்கு குழந்தையை குளிப்பாட்டலாமா என்ற சந்தேகம் எழும். பொதுவாக குழந்தை பிறந்து குளிப்பாட்டிய பின்னரே தாயிடம் கொடு ப்பார்கள். எனவே குளிப்பாட்ட பயப்பட வேண்டாம்.

மேலும் குழந்தையின் தொப்புள் கொடியை மிகவும் கவனமாக,அது உதிரும் வரை பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 10-15 நாட்களுக்குள் தொப்புள் கொடியானது உலர்ந்து உதிர்ந்து விடும். இல்லாவிட்டால், குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். ஆகவே குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப் பாகவும், சுத்தமாகவும் பராமரிக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தாய்மார்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

காலநிலை மாற்றங்கள்

தொப்புள் கொடியானது கால நிலை மாற்றங்களைப் பொறுத்து அது உலர்ந்து உதிர்வது உள்ளது. அதிலும் குளிர் அல்லது மழைக்காலத்தில் தொப்புள் கொடியை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவ்விடத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்ந்து, குழந்தைக்கு கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.

அம்மாக்களின் கவனத்திற்கு…

தாய்மார்கள் குழந்தைகளின் தொப்புள் கொடியை சுத்தம் செய்யும் முன்னர், தங்கள் கைகளை நன்கு சோப்புபோட்டு கழுவிக் கொள்ள வேண்டும். இது தொப்புள்கொடி யை சுத்தம் செய்யும்போது மட் டுமின்றி, குழந்தையை தூக்கும் போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

டயப்பர் போடும் போது…

குழந்தைகளுக்கு டயப்பர் போடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் டயப்பரை போடும் போது, தொப்புள் கொடியை மறைக்கும் வண்ணம் டயப்பரை அணிவிக்க வேண்டாம்.

குழந்தைக்கு பயன்படுத்தும் துணி …

குழந்தைக்கு பயன்படுத்தும் துணி காட்டனாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் காட்டன் துணிகொண்டு குழந்தையின் தொப்புள் கொடியை மறைத்தவாறு வைத்துக் கொள்ளுங்கள். இதனால் காற்றின் மூலம் நோய்த்தொற்று  தாக்குவதைத் தடுக்கலாம். மேலும் அவ்விடத்தில் ஈரப்பசை இருந்தால், அதனை காட்டன் துணிகள் உறிஞ்சிவிடும்.

டயப்பர் மாற்றும் போது…

குழந்தைகள் டயப்பரில் சிறு நீர் கழித்தாலோ அல்லது மலம் கழித்தாலோ, உடனே அதனை மாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால், அதன்மூலம் குழந்தைகளுக்கு அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

குளிப்பாட்டும் போது…

குழந்தைக்கு குளிப்பாட்டும் போது, தொப்புள் கொடியில் சிறிது தேங்காய் எண்ணெய் வைத்துக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும். இதனால் குழந்தையின் தொப்புள் கொடியில் ஈரப்பசையினால் சீழ் கட்டுவதைத் தடுக்கலாம்.

Leave a Reply