ஆன்லைனில் வந்தது நடிகர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள்

vishalதென்னிந்தியநடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் நடந்துள்ளதாகவும் வாராகி என்பவர் புகார் கூறி வரும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு, கடன் அடைத்த தொகை எவ்வளவும், மீதி வங்கியில் இருக்கும் இருப்புத்தொகை எவ்வளவு என்பதை பொருளாளர் கார்த்தி இணையதளத்தில் வெளியிடுவார் என்று கூறினார்.

அவர் கூறியபடியே இன்று இணையதளத்தில் ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியின் வரவு செலவு கணக்குகள் வெளியாகியுள்ளது. இந்த கணக்கை சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் தாராளமாக ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று விஷால் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் தாங்கள் பொருப்புக்கு வருவதற்கு முன்னர் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *