shadow

உலகின் முதல் 10 செல்வந்தர்கள் பட்டியல். பில்கேட்ஸ் முதலிடம்

bill gatesஉலகில் உள்ள செல்வந்தர்கள் குறித்த தரவரிசைப்பட்டியல் ஒன்றை கடந்த சில நாட்களாக தயாரித்து வந்த வெல்த்-எக்ஸ் (Wealth-X) என்ற நிறுவனம் தற்போது முடிவை வெளியிட்டுள்ளது. இந்த செல்வந்தர்கள் பட்டியலில் அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். பில்கேட்ஸின் சொத்து மதிப்பு  87.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான அமனிக்கோ ஆர்ட்டெகா பெற்றுள்ளார். இவருக்கு 66.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து உள்ளது. பிரபல பங்கு வர்த்தக தொழிலதிபர் வாரென் பஃபெட் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 60.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்,

இந்த பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் 42.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் எட்டாம் இடத்திலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிளூம்பர்க் 42.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர். பிரபல வால்மார்ட் சங்கிலித்தொடர் வணிக வளாகங்களின் உரிமையாளரான அலைஸ் வால்ட்டன் என்ற பெண் தொழிலதிபர் 33.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பதினைந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

முதல் பத்து இடங்களை பிடித்த செல்வந்தர்களின் பட்டியல் வருமாறு;

1. Bill Gates                 $87.4 billion
2. Amancio Ortega     $66.8 Billion
3. Warren Buffett       $60.7 Billion
4. Jeff Bezos               $56.6 Billion
5. David Koch              $47.4 Billion
6. Charles Koch         $46.8 Billion
7. Larry Ellison           $45.3 Billion
8. Mark Zuckerberg    $42.8 Billion
9. Michael Bloomberg  $42.1 Billion
10.Ingvar Kamprad        $39.3 Billion

Leave a Reply