shadow

தட்கல் ரயில் டிக்கெட் நேரமாற்றத்தால் குழப்பம். பொதுமக்கள் புகார்

ticketதட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேர மாற்றத்தால் எவ்வித பயனும் இல்லை என்றும், மாறாக இந்த புதிய நேர மாற்றத்தால், ஒரு நாள் முழுவதும் வீணாகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முதல் தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணி முதலும் ஏசி அல்லாத சாதாரண பெட்டிகளுக்கு காலை 11 மணி முதலும் மாற்றி அமைக்கப்பட்டது. பொதுவாக தட்கல் ரயில் டிக்கெட் எடுக்க பொதுமக்கள் அதிகாலை முதலோ அல்லது முந்தைய நாள் இரவில் இருந்தோ காத்திருப்பர். முன்பு காலை எட்டு மணிக்கு தட்கல் டிக்கெட் வழங்கப்பட்டதால் 8 மணியில் இருந்து 9மணிக்குள் டிக்கெட் எடுத்துவிட்டு பொதுமக்கள் சென்றுவிடுவார்கள்.

அதன்பின்னர் இந்த நேரம் 10 மணியாக மாற்றப்பட்டது. தற்போது 11 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிகாலையில் வரும் பொதுமக்கள் டிக்கெட்டை எடுத்து முடிக்க 12 அல்லது 1 மணி ஆகிவிடுவதால் கிட்டத்தட்ட அன்றைய நாள் முழுவதுமே வீணாகிறது.

இந்த  நேர மாற்றத்தால் என்ன பயன் என்பது குறித்து ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்திய ரயில்வே வாரியம் எடுத்த முடிவை நாங்கள் அமல்படுத்துகிறோம். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்கிறார்கள்.

இது தொடர்பாக டிஆர்இயு செயல் தலைவர் இளங்கோவ னிடம் கேட்டபோது, ‘‘இந்த நேரம் மாற்றத்தால் பொதுமக்கள் ஏசி வகுப்பில் இருந்து சாதாரண வகுப்பிற்கோ, சாதாரண வகுப்பில் இருந்து ஏசி வகுப்பிற்கோ டிக்கெட்டை உடனடியாக தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடி நிர்வாகத்துக்கும் எந்த பயனும் இல்லை.

இந்த நேரம் மாற்றம் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

Leave a Reply