shadow

அஜித்துடன் மோதும் வழக்கறிஞர் வெற்றி பெறுவாரா?

அஜித் படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை தங்கள் பட ரிலீஸை ஒத்திவைத்துவிடுவார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு அஜித்தின் ‘வேதாளம்’ படத்துடன் மோதிய கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படம் எடுபடாமல் போனது தெரிந்ததே

இந்த நிலையில் வரும் வியாழன் அன்று ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘விவேகம்’ படம் ரிலீஸ் தேதியில் எந்த திரைப்படமும் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திடீரென ‘தப்பாட்டம்’ என்ற திரைப்படம் வாலண்டரியாக அதே ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஹீரோ ஒரு துரை சுதாகர் ஒரு  வழக்கறிஞர்.  மிஜிபூர் ரஹ்மான் இயக்கியுள்ள இந்த படத்தில் டோனா ரோசாரியா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படம் ரிலீஸ் ஆவதை பெருமையாக கருதுகிறோம் என்றும், இருப்பினும் அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே எங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்

Leave a Reply