shadow

தனுஷின் ‘தங்க மகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
thanga magan
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘தங்க மகன்’ சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து, மீண்டும் இருவரும் இணைந்துள்ள திரைப்படம் ‘தங்க மகன்’. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்துள்ளனர். மேலும் கே.எஸ்.ரவிகுமார், ராதிகா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  இறுதி கட்ட வேலைகளில் இருக்கும் தங்கமகன் வருகிற டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என்ற தனுஷ் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தீபாவளி கழித்து வெளியாகும் என்று கூறப்படுகிறது. தனுஷ் படம் என்றாலே அனிருத் கூடுதல் கவனத்துடன் இசையமைப்பார் என்பதால் இந்த படத்தின் பாடல்களும் சூப்பராக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ‘விஐபி’ படத்தின் தொடர்ச்சி இல்லை என்றும் இந்த படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமானது என்றும் படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

Leave a Reply