shadow

இன்று தங்கமகன்’ சென்சார். ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு
thangamagan
‘விஐபி’ வெற்றி படத்தை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் வேல்ராஜ் இயக்கிய ‘தங்கமகன்’ படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் ‘தங்கமகன்’ படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து சென்சார் சர்டிபிகேட் தரவுள்ளதாகவும், சர்டிபிகேட் கிடைக்கப்பெற்றதும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

‘விஐபி’ போலவே ‘தங்கமகன்’ திரைப்படமும் காதல், குடும்ப செண்டிமெண்ட், சோகம், மோதல் ஆகிய கலந்து இருக்கும் என்பது நேற்றைய டிரைலரில் இருந்தே தெரிய வந்துள்ளது. ‘தமிழ்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கும் தனுஷுக்கு சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகிய இருவரும் ஜோடிகளாக நடித்துள்ளனர். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Leave a Reply