shadow

தாமிரபரணியில் தண்ணீர் உறிஞ்ச தடைவிதிக்க முடியாது: மதுரை நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றில் தனியார் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் உறிஞ்சுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

பெப்சி, கோககோலா உள்ளிட்ட தனியார் குளிர்பான நிறுவனங்கள் தினமும் தாமிரபரணி ஆற்றில் லட்சக்கணக்கான லிட்டர்கள் தண்ணீர் உறிஞ்சுகின்றன. இதனால், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களும் சமூகநல அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சும் 25 தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்கத் தடைவிதிக்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு அளித்திருக்கிறார். தினமும் 46.66 லட்சம் லிட்டர் தண்ணீர் தனியார் நிறுவனங்களால் உறியப்படுவதால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தாமிரபரணி ஆற்றில் தனியார் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் உறிஞ்சுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

Leave a Reply