shadow

சசிகலா மீதி அதிருப்தி. ஓபிஎஸ் அணிக்கு செல்கிறார் தம்பிதுரை

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ஓபிஎஸ் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் பன்னீர்செல்வமா? அல்லது அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவா? என கடும் போட்டி நிலவி வரும் நிலையில் நாளுக்கு நாள் ஓபிஎஸ்க்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது.

எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து காப்பாற்றும் அளவில் சசிகலா தரப்பு இருக்கும் நிலையில் ஓபிஎஸ்க்கு 11 எம்.பிக்களும், 7 எம்.எல்.ஏக்களும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். எம்.எல்.ஏக்கள் சசிகலாவின் சிறையில் இருந்து வெளியே வந்தால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கணிசமாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலாவுக்கு முழு ஆதரவு தெரிவித்து வந்த அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரையும், ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கயிருப்பதாகவும், இதன் காரணமாக அதிமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

செங்கோட்டையனுக்கு அவைத்தலைவரும் பொறுப்பும், திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிமுகவின் பொருளாளராகவும் கட்சி தலைமையால் அதிரடியாக நியமனம் செய்யப்பட்ட நிலையில் தம்பித்துரைக்கு எந்த பதவியும் கிடைக்க்காதது அவரது தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply