shadow

’தளபதி’ சூர்யா பிறந்த நாளை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

இன்று தமிழகம் முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பழைய பொருள்களை தெருவில் எரித்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்த போதிலும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இந்த பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் போகிப்பண்டிகை என்றதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தளபதி’ படத்தில் சூர்யா என்ற ரஜினியின் கேரக்டர் பிறந்தநாள் என்பதும் அந்த குழந்தையை ரயிலில் அவரது தாய் அனுப்பிவிடுவார் என்பதும் தான் நான் பலருக்கு ஞாபகம் வருகிறது போலும்

இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இன்று ’தளபதி சூர்யா பிறந்தநாள்’ என்று டுவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போகிப் பண்டிகையை ஒருவகையில் பிரபலப்படுத்தியது தளபதி திரைப்படம் என்பதும் அதில் பெரும் பங்கு ரஜினி மற்றும் மணிரத்னம் ஆகியோருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *