shadow

டிசம்பர் முதல் வாரத்தில் சிறை செல்லும் விஜய்: அதிர்ச்சி தகவல்

டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக சிறைக்கு விஜய் செல்ல இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன

விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பழம்பெரும் சிறைச்சாலை ஒன்றில் நடைபெற உள்ளது

இதற்கான அனுமதியை படக்குழுவினர் பெற்றுவிட்ட நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து இந்த சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பில் விஜய் விஜய்சேதுபதி அந்தோணி வருகையைச் ஆகிய மூவரும் கலந்து கொள்ளும் காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது

விஜய், மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி, அந்தோனி வர்கீஸ், சாந்தனு, சஞ்சீவ், ரம்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் அனிருத் இசையில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சேவியர் பிரிட்டோ பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *