shadow

தளபதி 61′ படத்தின் டீம் அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 61’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தகவல்கள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்று அல்லது நாளை இந்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஜோதிகா நடிக்கவுள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, காமெடி நடிகராக சத்யன் மற்றும் குணசித்திர வேடங்களில் சத்யராஜ், கோவை சரளா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, படத்தொகுப்பு ஆண்டனி ரூபன், புரடொக்ஷன் டிசைன் டி.முத்துராஜ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

Leave a Reply