‘கபாலி’யுடன் கனெக்ஷன் ஆனது ‘தல 57’
kabali
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் டீசர், மற்றும் இசை வெளியீடு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக இந்த படத்தின் ரிலீசை ரஜினி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான கேங்ஸ்டராக நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘பாட்ஷா’ படத்திற்கு பின்னர் பவர்புல் கேரக்டரில் ரஜினி நடித்திருப்பது இந்த படத்தில்தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘தல 57’ படத்திற்காக இயக்குனர் சிறுத்தை சிவா உருவாக்கிய கேரக்டரும் கிட்டத்தட்ட ‘கபாலி’ கேரக்டர் போன்றதுதானாம். வயது மட்டும்தான் வித்தியாசமே தவிர தன்னை சேர்ந்தவர்களின் நலனுக்காக கேங்க்ஸ்டராக மாறிய ஒரு தமிழரின் கதைதான் இதுவும் என்று கூறப்படுகிறது.

‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மலேசியாவில் உருவாக்கப்பட்டது போன்றே ‘தல 57’ படத்தின் பெரும்பகுதியை வெளிநாட்டில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *