shadow

தீபாவளியில் ரிலீஸாகும் ‘தல 56’ படமே ‘பாட்ஷா’ படம்தான். ஒரு அதிர்ச்சி தகவல்
ajith
‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜீத் நடிக்கவேண்டும் என சமீபத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தனது விருப்பத்தை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தயாராகி வரும் ‘தல 56’ படமே பாட்ஷாவின் ரீமேக் படம்தான் என்றும் இந்த படத்தின் வெற்றியை பொறுத்து ‘பாட்ஷா 2’ படத்தில் நடிப்பது குறித்து அஜீத் முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

‘தல 56’ திரைப்படம் ‘பாட்ஷா’ படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பாட்ஷாவின் ரஜினி ஆட்டோ டிரைவர், மும்பையில் கதைக்களம், தங்கை தாக்கப்பட்டதால் மீண்டும் கேங்ஸ்டார் ஆன ரஜினி என்பதுதான் கதைக்கரு. அதேபோல் ‘தல 56’ படத்திலும் அஜீத் டாக்சி டிரைவராகவும், மும்பைக்கு பதில் கொல்கத்தா கதைக்களமாகவும், தங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் வில்லன்களை வதம் செய்வதாகவும் காட்சிகள் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே ‘தல 56’ படம் கண்டிப்பாக ‘பாட்ஷா’ படத்தின் அதிகாரபூர்வமற்ற ரீமேக்தான் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்திருக்கும் லட்சுமிமேனன் காட்சிகள் பிளாஷ்பேக்கில் வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்கை செண்டிமெண்ட் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளதாக சிறுத்தை சிவா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Reply